குடமுக்கு என்ற கும்பகோணம்

இலக்கியத்தில் குடமுக்கு என்று குறிப்பிடபட்டாலும் மக்கள் வழக்கில் கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது...

தல வரலாறு - HISTORY

தல வரலாறு - HISTORY

கோவில்கள்- TEMPLE

கோவில்கள்- TEMPLE

கும்பகோணம் செய்திகள்

கும்பகோணம் பகுதயில் நடைபெறும் நிகழ்வுகள்

தல வரலாறு - HISTORY

தல வரலாறு - HISTORY

Thursday, October 17, 2019

ஐராவதேஸ்வரர் கோயில்

சிறப்புகள்  இரண்டாம்  இராஜராஜனின் காலத்தில் இராஜராஜேச்சுரம் என்று பெயரிடப்பட்டு, இன்று தராசுரமென மருவி வழங்கப்படுகிறது. ஐராவதேஸ்வரரின் துணைவி தெய்வநாயகி. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கிற யானை துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று வழங்கலாயிற்று தல புராணம் தெரிவிக்கிறது. இக்கோயிலுக்குள் காணப்படும் இந்திரன் அமர்ந்திருக்கும் ஐராவதத்தின் சிலை இக்கூற்றுக்குச் சான்றாக உள்ளது எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் "எமதீர்த்தம்" என அழைக்கப்படுகிற்து. இத்திருத்தலம் தொடர்பான மற்றொரு புராணமும் உள்ளது. மரணமற்ற பெருவாழ்வு வாழவும், தேவர்களை வெல்லவும் தாரன் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூசித்து, தவம் இருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்றும் கூறுகிறது
 தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்,  சோழ மன்னர்களில் 2-ம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில். 2004-ல் யுனெஸ்கோ  அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது தமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை பதிப்பித்துள்ளது. இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது. வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். இக்கோயில் கருவறை விமானம் ஐந்து நிலை மாடங்களுடன் 80 அடி உயரம் உள்ளது. 63  நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோயிலே ஐராவதேசுவரர் கோயிலாகும், முதலில் இக்கோயிலின் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டுப் பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது, தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி காணப்பட்டது  கோயில் விமானம் 24 மீ (80 அடி) உயரங்கொண்டது இக்கோயிலின் கருவறையைச் சுற்றி உட்சுற்றுப்பாதையும் ஒருகோட்டச்சு மண்டபங்களும் அமைக்கப்படவில்லை. முன் மண்டபம் ராஜகம்பீரன் திருமண்டபம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது 

Saturday, October 12, 2019

அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்?

அஷ்டமியும்_நவமியும்...

அர்த்தமுள்ளஇந்துமதம்... கவியரசர் கண்ணதாசன்

அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது ? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா ? பகுத்தறிவு வியாதிகள் கேட்பார்கள்.

நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல .

நம் முன்னோர்கள் அஷ்டமி  அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை ?  அதற்குக் என்ன காரணம் ?

அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.

கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது.

ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா ? இல்லை !!!!

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம்.

அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி  வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்)

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள் அமாவாசையாகவும் ) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.

அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும்.தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.

சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது.

அவ்வேளையில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration ஏற்படுகிறது.

அந்த Vibration  பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.

பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது நம்மால் சரியாக எழுதமுடிவதில்லை அல்லவா ? அதைப்போன்று.

அதன்காரணமாக எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது. அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும்.

நவமி கழிந்தபிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெரும்.

அதனால் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்

Gallery Kudamukku








Tuesday, November 26, 2013

நாகேஸ்வரன் கோவில் ( Nageshwaran Temple at Kumbakonam)

நாகேஸ்வரன் கோவில்

நாகேஸ்வரன் கோவில் இந்து கோவில் ஆகும், சிவன் முதன் கடவுளாக எழுந்தருளி உள்ளார், நாகேஷ்வரன் கோவிலை பற்றி தேவாரத்தில் குறிப்பிடடு பாடப்பட்டுள்ளது, ஆதித்திய சோழனால் ஒன்பதாம் நுற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டது, கட்டிடகலை கலை வல்லுனர்களாலும் மற்றும் வானியல் வல்லுனர்களாலும் வடிவமைக்கப்பட்டது இக்கோவிலாகும். இக்கோவிலின் சிறப்பு அம்சமாக சித்திரை மாதம் மட்டும் சூரிய ஒளிக்கதிர் கோவிலின் உள்ளே இடது கருவறையில் விழுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, நாகேஸ்வரன் கோவில் முன்று கோபுரம் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைக்களில் அமைக்கப்பட்டுள்ளது. ரகுஸ்தலமாகவும், நவக்கிரக புண்ணியஸ்தலமாகவும் விளங்குகிறது, இராஜேந்திர சோழர்கள் குறிப்பயணமான போர்க்கு செல்லும் போது இந்த நாகேஸ்வரன் கோவில் உள்ள கங்கா கணபதியை வணங்கி செல்வதால் வெற்றி பெற்றதாக சொல்லப்படுகிறது.