சிறப்புகள் இரண்டாம்
இராஜராஜனின் காலத்தில் இராஜராஜேச்சுரம் என்று பெயரிடப்பட்டு, இன்று தராசுரமென மருவி வழங்கப்படுகிறது. ஐராவதேஸ்வரரின் துணைவி தெய்வநாயகி. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கிற யானை துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று வழங்கலாயிற்று தல புராணம் தெரிவிக்கிறது. இக்கோயிலுக்குள் காணப்படும் இந்திரன் அமர்ந்திருக்கும் ஐராவதத்தின் சிலை இக்கூற்றுக்குச் சான்றாக உள்ளது எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் "எமதீர்த்தம்" என அழைக்கப்படுகிற்து. இத்திருத்தலம் தொடர்பான மற்றொரு புராணமும் உள்ளது. மரணமற்ற பெருவாழ்வு வாழவும், தேவர்களை வெல்லவும் தாரன் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூசித்து, தவம் இருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்றும் கூறுகிறது
தமிழ்நாட்டில்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு
அருகில் உள்ள தாராசுரம்
என்னும் ஊரில் உள்ள ஓர்
இந்துக்
கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசனால்
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து
அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட
88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும், சோழ மன்னர்களில்
2-ம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில்.
2004-ல் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக
அறிவிக்கப்பட்டது தமிழ் நாடு தொல்லியல் துறை
இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து
சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை
பதிப்பித்துள்ளது. இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன.
தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி
நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த
மண்டபமும் என பல அரிய
சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில்
கொண்டுள்ளது. வல்லுனர்களால்,
"சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் இந்த
தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய
மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது.
வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று
தனியே ஒரு கோயில் வலதுபுறம்
அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல
முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில்
சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக
அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று
இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே
பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி
கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். இக்கோயில்
கருவறை விமானம் ஐந்து நிலை
மாடங்களுடன் 80 அடி உயரம் உள்ளது.
63 நாயன்மார்களின்
சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து
வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு
மாற்றி, அங்கு கட்டிய கோயிலே
ஐராவதேசுவரர் கோயிலாகும், முதலில் இக்கோயிலின் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டுப்
பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது,
தக்கயாகப்பரணி இந்தக்
கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது
இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு
கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை
அமையப்பெற்றது என்ற செய்தி காணப்பட்டது கோயில் விமானம்
24 மீ (80 அடி) உயரங்கொண்டது இக்கோயிலின் கருவறையைச் சுற்றி
உட்சுற்றுப்பாதையும் ஒருகோட்டச்சு மண்டபங்களும் அமைக்கப்படவில்லை. முன் மண்டபம் ராஜகம்பீரன்
திருமண்டபம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment